/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இறந்த தொழிலாளரின் பெற்றோருக்கு பென்சன்
/
இறந்த தொழிலாளரின் பெற்றோருக்கு பென்சன்
ADDED : நவ 08, 2025 11:45 PM
பல்லடம்: திண்டுக்கல்லை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 30; காங்கயத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்த இவர், 2021ல் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
வேலை நேரத்தில் நடந்த விபத்து என்பதாலும், இவரது பெற்றோர் பிச்சை, 63, மற்றும் பாப்பாத்தி, 56 ஆகியோருக்கு, வாழ்நாள் பென்ஷன் வழங்க இ.எஸ்.ஐ., நிறுவனம் முன் வந்தது.
தேனியைச் சேர்ந்தவர் சரத்குமார் ஜெயராஜ், 26. வெள்ளகோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், மார்ச்சில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இவரும், பணியில் இருந்த போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்ததால், இ.எஸ்.ஐ., நிர்வாகம், இவரது தாய் ராஜாமணிக்கு வாழ்நாள் பென்ஷன் வழங்க முன் வந்தது.
அதன்படி, ராதாகிருஷ்ணனின் பெற்றோருக்கு, 2.75 லட்சம் ரூபாய் உதவித்தொகை மற்றும் மாதம், 5 ஆயிரம் ரூபாய் பென்ஷன் மற்றும் சரத்குமார் ஜெயராஜின் தாய்க்கு, 9,500 ரூபாய் உதவி தொகை மற்றும் மாதம், 1,300 ரூபாய் பென்ஷன் தொகை வழங்கப்பட உள்ளது.
இதற்கான, காசோலை மற்றும் ஆணையை இ.எஸ்.ஐ., மண்டல துணை இயக்குனர் விக்னேஷ் வழங்கினார். கிளை அலுவலக மேலாளர் ராஜா மற்றும் அலுவலர்கள் ஜெயக்குமார் சவுந்திரராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

