/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறுகிய காலத்தில் எப்படி சாத்தியம்? கேள்வி எழுப்பும் காங். தேசிய செயலாளர்

ADDED : நவ 08, 2025 11:45 PM
திருப்பூர்: காங். தேசிய செயலாளரும், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவருமான கோபிநாத், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் மனிஷ்நாரணவரே மற்றும் மாநில தேர்தல் கமிஷனர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோருக்கு அனுப்பிய கடிதம்:
தீவிர திருத்தம் வாயிலாக, திருப்பூரில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் செயல்பாடுகள் வரவேற்கத்தக்கவை. ஆனால், உரிய கால அவகாசம் வழங்காமல், விரைவாக மேற்கொள்வது சரியாகாது.
தமிழகத்தில், 2026ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, தீவிர திருத்த பணிகளை, தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் மேற்கொள்ள விரும்பினால், காங். கட்சியின் கீழ்க்கண்ட ஆலோசனைகளை கருத்தில் கொள்ளவேண்டும்.
ஒட்டுமொத்த வாக்காளர் பட்டியலையும் திருத்தம் செய்வதற்கு பதிலாக, இரட்டை பதிவு, இறந்த வாக்காளர்களை நீக்கம் செய்தாலே போதும். தீவிர திருத்த பணியில், பி.எல்.ஓ.,வுடன் (ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள்), பி.எல்.ஏ., - 2வும் (ஓட்டுச்சாவடி முகவர்) சேர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்.
பி.எல்.ஓ.,க்கள், ஒவ்வொரு வாக்காளரின் வீடு தேடி மூன்று முறை செல்வதை உறுதிப்படுத்த, ஜி.பி.எஸ்., டிராக்கிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவேண்டும்; அவ்விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 24 லட்சம் வாக்காளர் உள்ளனர். மிகக்குறுகிய காலத்துக்குள், அனைத்து வாக்காளர்களிடமிருந்தும் தீவிர திருத்த படிவத்தை பூர்த்தி செய்வது எப்படிசாத்தியமாகும். மேற்கண்ட எங்கள் சந்தேகங்களுக்குதேர்தல் கமிஷன் சரியான விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.