/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எல்.ஆர்.ஜி., கல்லுாரிக்கு ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு
/
எல்.ஆர்.ஜி., கல்லுாரிக்கு ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு
எல்.ஆர்.ஜி., கல்லுாரிக்கு ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு
எல்.ஆர்.ஜி., கல்லுாரிக்கு ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு
ADDED : பிப் 14, 2024 12:35 AM
திருப்பூர்;திருப்பூர், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரிக்கு, 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எப்போது பணி துவங்கும், தேர்தலுக்கு முன் பணிகள் துவங்கி விடுமா என்ற எதிர்பார்ப்பு பேராசிரியர் மற்றும் மாணவியர் மத்தியில் எழுந்துள்ளது.
'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் பரிந்துரையில், திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில், 28 கூடுதல் வகுப்பறை, 12 ஆய்வுக்கூடம், குடிநீர் வசதி, வளாகம் முழுதும் கான்கீரிட் சாலை, விளையாட்டு மைதானம் விரிவுபடுத்துதல், பல்நோக்கு திறந்த வெளி அரங்கம் உள்ளிட்ட பணிகளுக்கு, 19.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டது.
கல்லுாரிக்கென நிதி ஒதுக்கி, 40 நாள் கடந்து விட்டது. ஆனால், முதற்கட்ட பணிகள் கூட துவங்கவில்லை. மாவட்ட தேர்தல் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகமாக இக்கல்லுாரி வளாகம் ஒவ்வொரு ஆண்டும் மாற்றப்படுகிறது. நடப்பு லோக்சபா தேர்தலுக்கு அவ்வாறு மாற்ற வாய்ப்புள்ளது.
எனவே, அதற்கு முன்னதாக, குறைந்தபட்ச பணிகளாவது துவங்க வேண்டும். அப்போதுதான், 2024 - 25ம் கல்வியாண்டுக்கு கல்லுாரியை பயன்படுத்த முடியும்; மாணவியருக்கும் பயனுள்ளதாக இருக்கும், என்கின்றனர், இக்கல்லுாரி பேராசிரியர்கள்.

