/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓய்வூதியர் குறைகேட்பு மனுக்கள் அளிக்க கெடு
/
ஓய்வூதியர் குறைகேட்பு மனுக்கள் அளிக்க கெடு
ADDED : டிச 13, 2024 10:53 PM
திருப்பூர்; ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் ஜன., 8ம் தேதி, காலை, 10:30 மணிக்கு நடைபெற உள்ளது. ஓய்வூதிய இயக்குனர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்தஅதிகாரிகள் பங்கேற்று, ஓய்வூதியர்களின் குறைகளை கேட்க உள்ளனர்.
தமிழக அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதிய பலன்கள் கிடைக்காதது உள்பட எவ்வித குறைகள் இருப்பினும், மனுவாக எழுதி, கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் (கணக்கு) வரும் 30ம் தேதிக்குள் கிடைக்கும்வகையில், நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பிவைக்கவேண்டும்.
மாநகராட்சி மூலம் ஓய்வூதியம் பெறுவோர், அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் இந்த கூட்டத்தில் விண்ணப்பம் அளிக்க கூடாது. ஓய்வூதியர்கள், தங்கள் கோரிக்கைகளை, சங்கம் மூலம் அல்லாமல் நேரடி விண்ணப்பமாக அளிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.