/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இருபது ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
இருபது ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
இருபது ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
இருபது ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : நவ 18, 2024 10:31 PM

உடுமலை; ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
உடுமலை அருகே ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 2004ம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் மாணவர் கனகராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில், 40க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆசிரியர்களும் பங்கேற்று மகிழ்ந்தனர். பள்ளிக்கு, 18 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள், நாற்காலி உள்ளிட்ட பொருட்கள், முன்னாள் மாணவர்களின் சார்பில் வழங்கப்பட்டன.
முன்னாள் மாணவர்கள் ேஷாபனா, ஜெகதீசன், லால்பகதுார்சாஸ்திரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
தொடர்ந்து மானுப்பட்டியில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் இல்லத்தில், மதிய உணவு வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்களின் சார்பில், ஆயிரம் ரூபாய் நன்கொடையும் கொடுக்கப்பட்டது. முன்னாள் மாணவி பரிமளா நன்றி தெரிவித்தார்.

