/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி
/
முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி
ADDED : ஏப் 21, 2025 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில், 2000 ம் ஆண்டு, பிளஸ் 2 முடித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம், நேற்று, பள்ளி வளாகத்தில் நடந்தது.
பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 70 மாணவர்கள் ஒன்றுகூடினர். 25 ஆண்டுக்கு பின் சந்தித்ததால், ஒருவருக்கொருவர் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, மாணவர்களை வாழ்த்தினர். முன்னாள் மாணவர்கள் தங்களது ஆசிரியர் களுக்கு நினைவுப்பரிசு வழங்கினர். நிறைவாக, 25 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டது.

