/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாம்பியன் ஷிப் வென்றது அமராவதிநகர் சைனிக் பள்ளி
/
சாம்பியன் ஷிப் வென்றது அமராவதிநகர் சைனிக் பள்ளி
ADDED : ஆக 14, 2025 08:18 PM

உடுமலை; உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியில், சைனிக் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு மற்றும் கலைப்போட்டிகள் நடந்தன.
சைனிக் பள்ளிகளுக்கு இடையிலான கைப்பந்து, கூடைப்பந்து, தடகளப்போட்டிகள்மற்றும் கலைப்போட்டிகள் உடுமலை அமராவதிநகர் சைனிக் பள்ளியில் நடந்தது.
போட்டிகள் ஆக., 4ம்தேதி முதல் 11ம் தேதி வரை நடந்தது. இப்போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவை சேர்ந்த 4 அரசு சைனிக் பள்ளிகள், 6 தனியார் சைனிக் பள்ளிகளை சேர்ந்த 400 மாணவர்கள் பங்கேற்றனர்.
உடுமலை அமராவதிநகர் சைனிக் பள்ளி, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. பரிசளிப்பு விழாவில், பள்ளி முதல்வர் கேப்டன் மணிகண்டன் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினார்.
அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவர்கள், ஹரியானாவில் நடக்க உள்ள, அகில இந்திய சைனிக் பள்ளிகளுக்கு இடையிலான தேசிய விளையாட்டு மற்றும் கலாசார சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளனர்.