/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமாவாசை: திருமூர்த்திமலையில் திரளான பக்தர்கள் தரிசனம்
/
அமாவாசை: திருமூர்த்திமலையில் திரளான பக்தர்கள் தரிசனம்
அமாவாசை: திருமூர்த்திமலையில் திரளான பக்தர்கள் தரிசனம்
அமாவாசை: திருமூர்த்திமலையில் திரளான பக்தர்கள் தரிசனம்
ADDED : நவ 01, 2024 10:08 PM

உடுமலை; உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், அமாவாசை தினமான நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், தோணியாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
ஐப்பசி அமாவாசையான நேற்று, சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை முதலே, பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
அதே போல், மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியிலும் நீர் வரத்து சீராக இருந்ததால், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்பட்டனர்.
அமாவாசை மற்றும் தீபாவளி பண்டிகை விடுமுறை காரணமாக, சுற்றுலா பயணியரும் அதிகளவு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.