/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் கடையில் ஆள் மாறாட்டம் கள ஆய்வில் அம்பலம்
/
ரேஷன் கடையில் ஆள் மாறாட்டம் கள ஆய்வில் அம்பலம்
ADDED : மே 23, 2025 12:36 AM
திருப்பூர் : திருப்பூரில் உள்ள ரேஷன் கடையில் தொடர்பில்லாத நபர், ரேஷன் பொருள் விற்பனையில் ஈடுபட்டது, அதிகாரிகளின் கள ஆய்வில் தெரியவந்தது.
திருப்பூர், காங்கயம் ரோட்டில் உள்ள வளர்மதி கூட்டுறவு சொசைட்டிக்கு உட்பட்ட அரண்மனைபுதுாரிலுள்ள உள்ள தெற்கு - 1 ரேஷன் கடையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சரிவர வினியோகிப்பதில்லை; பொறுப்பற்ற முறையில் கடை ஊழியர் பதில் அளிக்கிறார் என்ற புகாரை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர் ரவிச்சந்திரன் கவனத்துக்கு, சரவணன் என்பவர் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், தெற்கு குடிமைப்பொருள் தாசில்தார் ராசு தலைமையிலான அலுவலர்கள், சம்மந்தப்பட்ட ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், கடையின் விற்பனையாளர் விக்னேஷ் என்பவர், இல்லாததும், அவருக்கு பதிலாக தொடர்பில்லாத வேறு ஒரு பெண், ரேஷன் பொருட்களை வினியோகித்து கொண்டிருந்ததும் தெரிய வந்தது.
விற்பனையாளர் விக்னேைஷ மொபைல் போனில் தொடர்பு கொள்ள, 30 நிமிடத்தில் அவர் வந்து சேர்ந்தார். அந்த பெண் பார்வதி என்பதும், அவருக்கும் ரேஷன் கடைக்கும் தொடர்பில்லை என்பதும் தெரிய வர, இந்த ஆள்மாறாட்டம் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை சமர்பிக்கப்படும் என, அலுவலர்கள் தெரிவித்தனர்.