ADDED : டிச 07, 2024 06:39 AM

திருப்பூர்; அம்பேத்கர் நினைவு நாள் முன்னிட்டு பல்வேறு அமைப்பினர், திருப்பூரில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ெசலுத்தினர்.
திருப்பூர், ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, மேயர் தினேஷ்குமார், கவுன்சிலர்கள் நாகராஜ், குமார் மற்றும் சாந்தாமணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட மாணவர் பெருமன்றம் சார்பில், மாநில குழு உறுப்பினர் முத்துக்குமார் தலைமையில் நிர்வாகிகள், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதேபோல் பல்வேறு அமைப்புகள் சார்பிலும், தன்னார்வலர்களும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருப்பூர் வடக்கு மாவட்ட, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அவிநாசி தாலுகா அலுவலகம் முன்பும்; சேவூர் ரவுண்டானாவிலும் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கப்பட்டது.
வக்கீல் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய அமைப்பாளர் ரங்கசாமி, நீலமலை முத்து சாமி, செயற்குழு உறுப்பினர்கள் கருப்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.