ADDED : மே 03, 2025 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் பா.ஜ., வினர் அம்பேத்கர் நினைவு கருத்தரங்கை நடத்தினர்.
சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் வித்திட்ட அம்பேத்கரின் நினைவை போற்றும் வகையில் திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், சிறப்பு கருத்தரங்கம் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் வெள்ளியங்கிரி வழி நடத்தினார். மாநில செயலாளர் மலர்கொடி, மாவட்ட துணை தலைவர்கள் தங்கராஜ், பாலு, கலாமணி உட்பட பலர் பங்கேற்றனர். கருத்தரங்கில், அம்பேத்கருக்கு காங்., கட்சி செய்த துரோகங்கள் என்ற தலைப்பில் சிவசங்கரி, ஜீவஉமா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.