/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகர்ப்புற உள்ளாட்சி பணி விதிகள் திருத்தம் மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் வரவேற்பு
/
நகர்ப்புற உள்ளாட்சி பணி விதிகள் திருத்தம் மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் வரவேற்பு
நகர்ப்புற உள்ளாட்சி பணி விதிகள் திருத்தம் மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் வரவேற்பு
நகர்ப்புற உள்ளாட்சி பணி விதிகள் திருத்தம் மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் வரவேற்பு
ADDED : மார் 29, 2025 06:28 AM
திருப்பூர் : நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பணி விதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள திருத்தங்களுக்கு ஊழியர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராதாகிருஷ்ணன், பொது செயலாளர் சுஜாத் அலி, ஆலோசகர் சீதராமன் ஆகியோர் கூறியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பணி விதிகளில் கடந்த, 2023ம் ஆண்டில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. சென்னை மாநகராட்சி, பிற மாநகராட்சிகள், நகராட்சிகள் ஆகியவற்றுக்கு தனித்தனியாக இருந்த விதிமுறைகள் ஒன்றாக இணைக்கப்பட்டன.
இதனால், மாநிலம் முழு வதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள் பதவி உயர்வு பெறுவதில் சிக்கல் நிலவியது. இது குறித்து ஊழியர் சங்கங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கான குழு அமைத்து விதிமுறைகள் திருத்தம் குறித்து அறிக்கை பெறப்பட்டது. அதன்படி, தற்போது திருத்தங்கள் அறிவிக்கப்பட்டு, அரசாணை (எண்:32/நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை /4.3.2025) வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வகையில், அடிப்படை பணியாளர் பதவி உயர்வு பெறுவர். டிப்ளமோ முடித்த இளநிலை பொறியாளர்கள் செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு பெற முடியும். துறை வாரியான தேர்வுகளில், 55 வயது பூர்த்தியடைந்தோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பணிகளுக்கு இடையே பணிக்காலம் குறைக்கப்பட்டுள்ளது.
தரம் உயர்த்தப்படும் உள்ளாட்சிகளில் பணியாளர்களுக்கு அமைப்புக்கான தகுதி இருந்தால் போதும் என்பது உள் ளிட்ட பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள் ளது. கூட்டமைப்பு சார்பில், இவற்றை முழு மனதுடன் வரவேற்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.