/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயிரைக் காப்பாற்ற ஆம்புலன்ஸ் தேவை
/
உயிரைக் காப்பாற்ற ஆம்புலன்ஸ் தேவை
ADDED : ஜன 01, 2026 05:28 AM

திருப்பூர்: தேசிய மற்றும் மாநில நகர்ப்புற சுகாதார திட்டம், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி, 48.68 கோடி ரூபாயில் கட்டப்பட்டு, திருப்பூர், 15 வேலம்பாளையத்தில், ஆக. மாதம் அரசு மருத்துவமனை திறக்கப்பட்டது.
கடந்த சில தினங்கள் முன் முதியவர் ஒருவரை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்க, 108 ஆம்புலன்ஸ்க்கு அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. டாக்டர்கள் தொடர்பு கொண்ட பின், ஆம்புலன்ஸ் வந்து அழைத்துச் சென்றது. மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அவரது உயிர் காப்பாற்றப்பட்டது.
அரசு மருத்துவமனைக்கென பிரத்யேக, 108 ஆம்புலன்ஸ் மருத்துவமனை வளாகத்திலேயே நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நான்கு முதல் ஆறு 108 ஆம்புலன்ஸ்கள் எப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு ஆம்புலன்ைஸ 15 வேலம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வழங்கினால் கூட பயனுள்ளதாக இருக்கும்.

