sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 ஒரு உலகம்... ஒரு குடும்பம்

/

 ஒரு உலகம்... ஒரு குடும்பம்

 ஒரு உலகம்... ஒரு குடும்பம்

 ஒரு உலகம்... ஒரு குடும்பம்


ADDED : ஜன 01, 2026 05:28 AM

Google News

ADDED : ஜன 01, 2026 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், தங்கை, மாமன், மச்சான், அத்தை என, நீளும் உறவுகள்; ஒரே வீட்டில் அல்லது ஒரே பகுதியில் குழுமியிருந்த கூட்டுக்குடும்ப கலாசாரம் என்பது, வாழ்வியல் முறை மட்டுமல்ல; நமது பாரம்பரியமும் கூட.ஆலமர விழுதுகளாய் குழுமியிருந்த கூட்டுக்குடும்ப பந்தம், மெல்ல, மெல்ல சிதைந்து, கணவன், மனைவி, குழந்தை என்ற, குறுகிய வட்டத்துக்குள் சுருங்கிவிட்டது.திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில், பிற மாவட்டம், வெளி மாநிலங்களை சேர்ந்த பலர், பிழைப்புக்காக பல்வேறு இடங்களில் இருந்து இடம் பெயர்ந்து வந்துள்ளனர். பலர் இங்கேயே 'செட்டில்' ஆகிவிட்டனர்; சிலர், தங்களின் சொந்த ஊருக்கு அவ்வப்போது சென்று, திரும்புகின்றனர்.

எந்தவொரு சூழ்நிலையில் இருந்தாலும், எந்த வயதிலும் தங்களது குடும்பத்தை கைவிடாமல் அவர்களுக்கு ஆதரவாக இருக்க என்பதை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும், ஜன. 1ல் உலக குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது.இந்தாண்டின் உலக குடும்ப தின மையக்கருத்தாக, 'ஒரு உலகம்; ஒரு குடும்பம்' என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது.---

என்றும் நீடிக்கும்

பந்தம், பாசம்

நான், திருப்பூருக்கு இடம் பெயர்ந்து வந்து, 10 ஆண்டுகளாகிறது. திருப்பூரை பொறுத்தவரை, பிழைப்புக்காக இடம் பெயர்ந்து வந்தவர்கள் ஏராளம். அவர்கள் பலரும், காலத்தின் கட்டாயத்துக்காக வருமானத்துக்கு வழிவகை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் தான் திருப்பூருக்கு வந்து வசிக்கின்றனர். இருப்பினும், குடும்பத்துடன் இணைந்து வசிக்க முடியவில்லை என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்யும். இருப்பினும், எங்கோ உள்ள அவர்களது குடும்பத்தின் மீதான பந்தம், பாசமும், நீடித்துக்கொண்டே தான் இருக்கிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விழா நாட்களில், தங்களின் சொந்த ஊர் திரும்பும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் கூட்டமே இதற்கு சாட்சி.

- குட்டி கிருஷ்ணன், தலைவர்,வெங்கடேஸ்வர் நகர் குடியிருப்போர் நலச்சங்கம்.

பணம் பிரதானமெனில்

உறவுகளை இழப்போம்

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த மண்ணில் வாழும் நல் வாய்ப்பை இழக்கின்றனர். குடும்பத்தின் நிலவும் பிரச்னைகளை நேரடியாக அணுக முடியாமல், தொலைபேசி வாயிலாகவே கேட்டு தெரிந்துகொள்ள முடிகிறது; இதனால், அந்த பிரச்னையின் உண்மை தன்மை முழுவதுமாக புரிந்துக் கொள்ள முடியாமல் போகிறது. பணம் தேடலுக்காக இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியாத நிலையும் இருக்கிறது. இதுபோன்ற சவால்கள் இருக்கின்றன. இருப்பினும், பணமே பிரதானமாக இருந்தால், உறவுகளை இழந்துவிடுவோம். உறவுகளுக்காக தான் சம்பாதிக்கும் பணம் என, இந்த இரு விஷயங்களை சமன் செய்து கொண்டு போக வேண்டும்; தவறும்பட்சத்தில், குடும்பம் தடம் மாறும்.

- மணிவண்ணன், எழுத்தாளர்.

பணம் பிரதானமெனில்: உறவுகளை இழப்போம்: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த மண்ணில் வாழும் நல் வாய்ப்பை இழக்கின்றனர். குடும்பத்தில் நிலவும் பிரச்னைகளை நேரடியாக அணுக முடியாமல், தொலைபேசி வாயிலாகவே கேட்டு தெரிந்துகொள்ள முடிகிறது; இதனால், அந்த பிரச்னையின் உண்மை தன்மை முழுவதுமாக புரிந்துக் கொள்ள முடியாமல் போகிறது. பணம் தேடலுக்காக இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியாத நிலையும் இருக்கிறது. இதுபோன்ற சவால்கள் இருக்கின்றன. இருப்பினும், பணமே பிரதானமாக இருந்தால், உறவுகளை இழந்துவிடுவோம். உறவுகளுக்காக தான் சம்பாதிக்கும் பணம் என, இந்த இரு விஷயங்களை சமன் செய்து கொண்டு போக வேண்டும்; தவறும்பட்சத்தில், குடும்பம் தடம் மாறும்.

- மணிவண்ணன்: எழுத்தாளர்.:






      Dinamalar
      Follow us