
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;தை பிறந்து ஒரு வாரமாகியும், பனியின் தாக்கம் குறையவில்லை. இதனால், உழவர் சந்தைக்கான கீரை வரத்து நாளுக்குள் நாள் குறைந்து வருகிறது.
மூட்டைக்கு, 50 முதல், 80 கட்டு வீதம், ஐந்து முதல் பத்து மூட்டை ஒரு விவசாயி கொண்டு வந்த நிலை மாறி, கீரை விவசாயிகள், 20 முதல், 25 கட்டு தான் கொண்டு வருகின்றனர்.வழக்கமாக, வரத்து அதிகமாக இருக்கும் போது ஒரு கட்டு, ஆறு ரூபாய், நான்கு கட்டு எடுத்தால், 20 ரூபாய் என விலை குறைத்து விவசாயிகள் விற்பனை செய்வர்.
தற்போது, பனிப்பொழிவால், கீரை வரத்து பாதியாக குறைந்துள்ளதால், விரல் விட்டு எண்ணும் விவசாயிகளே சந்தைக்கு கீரை கொண்டு வருகின்றனர்.சந்தையிலே கட்டு பத்து ரூபாய் என்பதால், வாங்கி விற்கும், சில்லறை காய்கறி வியாபாரிகள், காய்கறி கடை நடத்துபவர் சந்தையில் இருந்து கீரை வாங்கிச் செல்ல தயங்கினர்.