/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறந்த நிலையில் கிணறு மக்களுக்கு விபத்து அபாயம்
/
திறந்த நிலையில் கிணறு மக்களுக்கு விபத்து அபாயம்
ADDED : நவ 10, 2024 04:34 AM
பல்லடம் : பல்லடம், பச்சாபாளையத்தில், திறந்த நிலையில் உள்ள கிணற்றால் ஆபத்து காத்திருக்கிறது.
பல்லடம் நகராட்சி, பச்சாபாளையம் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குடியிருப்புகள், கோவில் மற்றும் ரேஷன் கடைக்கு அருகே, பயன்பாடற்ற கிணறு ஒன்று திறந்த நிலையில் உள்ளது. ரோட்டோரத்தில் கிணறு இருப்பதால், விபத்து அபாயம் உள்ளது.
ஏற்கனவே இருந்த தடுப்பு கம்பிகள் உடைந்து, சீமை கருவேல முட்கள் முளைத்து, பாதுகாப்பற்ற நிலையில் கிணறு உள்ளது. எண்ணற்ற வாகனங்களும் இவ்வழியாக செல்லும் நிலையில், ரோட்டில் விளையாடும் சிறுவர்களுக்கும் ஆபத்து காத்திருக்கிறது.
நீண்ட நாட்களாக திறந்த நிலையில் உள்ள பயன்பாடற்ற கிணற்றுக்கு தடுப்புக் கம்பிகள் அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.