/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாழ்வில் மறக்க முடியாத தருணம்; பதக்கம் பெற்ற போலீசார் மகிழ்ச்சி
/
வாழ்வில் மறக்க முடியாத தருணம்; பதக்கம் பெற்ற போலீசார் மகிழ்ச்சி
வாழ்வில் மறக்க முடியாத தருணம்; பதக்கம் பெற்ற போலீசார் மகிழ்ச்சி
வாழ்வில் மறக்க முடியாத தருணம்; பதக்கம் பெற்ற போலீசார் மகிழ்ச்சி
ADDED : ஜன 26, 2025 11:57 PM

திருப்பூர்; சமூகத்தில் குற்றங்களை குறைத்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இரவு - பகல் பாராமல் பணிபுரியும் போலீசார், சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களின்போது அரசு வழங்கும் பதக்கங்களை, மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த, மாநகர போலீசார் 23 பேரும், மாவட்ட போலீசார் 35 பேர் என, மொத்தம் 58 பேர், முதல்வர் பதக்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அப் போலீசாருக்கு, சிக்கண்ணா கல்லுாரியில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில், கலெக்டர் கிறிஸ்துராஜ் முதல்வர் பதக்கம் வழங்கி, பாராட்டினார். மிடுக்காக வந்து, கலெக்டர் கையால், பதக்கங்கள் பெற்ற போலீசார், பெருமிதமடைந்தனர்.
முதல்வர் பதக்கம் பெற்ற போலீசாரில் ஒருவரான ஜெயச்சந்திரன், 39 கூறியதாவது:
கடந்த 2009ல் போலீசில் சேர்ந்து, படிப்படியாக உயர்வு பெற்று, தற்போது, திருப்பூர் வடக்கு ஸ்டேஷனில் தலைமை காவலராக பணிபுரிகிறேன். இதற்கு முன்னர் பல்வேறு நற்சான்றுகள் பெற்றுள்ளேன்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாருக்கு பதக்கம் வழங்கப்பட்டுள்ளது; அவர்களில் நானும்ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
முதல்வர் பதக்கம் பெற்றுள்ள இந்த தருணத்தை, என் வாழ்நாளில் என்றும் மறக்கமுடியாது. தொடர்ந்து இதே நேர்மையோடு கடைமையாற்ற உறுதிபூண்டுள்ளேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.