/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாதுகாப்பற்ற சூழல் பள்ளியில் அவலம்
/
பாதுகாப்பற்ற சூழல் பள்ளியில் அவலம்
ADDED : மார் 02, 2024 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்;அலகுமலையில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இதன் முன் பகுதி நுழைவாயில் இடிந்து வருடக்கணக்கில் ஆகிறது.
திறந்தவெளியில் இருப்பதால் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. 'குடி'மகன்கள் மதுபாட்டில்களை வீசி செல்வதும் நடக்கிறது. சட்டவிரோத செயல்கள் நடப்பதற்கும் ஏதுவாகிறது.
சிதிலமடைந்து கிடக்கும் பள்ளியின் நுழைவாயிலை சீரமைத்து தர வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தபோதிலும் அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. மாணவர் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனடியாக இடிந்து கிடக்கும் நுழைவாயிலை சரி செய்து தர வேண்டும்.

