/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி; இன்று குட்டீஸூக்கு வித்யாரம்பம்
/
'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி; இன்று குட்டீஸூக்கு வித்யாரம்பம்
'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி; இன்று குட்டீஸூக்கு வித்யாரம்பம்
'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி; இன்று குட்டீஸூக்கு வித்யாரம்பம்
ADDED : அக் 02, 2025 01:15 AM
திருப்பூர்; 'தினமலர்' நாளிதழ், ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பள்ளி சார்பில், குழந்தைகளுக்கான, 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி, முன்பதிவு செய்த குழந்தைகளுக்கு, திட்ட மிடப்படி, அவிநாசி அருகேயுள்ள ராக்கியாபாளையம், ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில் இன்று நடக்கிறது.
விஜயதசமி நாளில், தட்டில் அரிசி அல்லது நெல்மணிகளை பரப்பி, குழந்தைகள் கரம் பற்றி, 'அ' என்று எழுதி, நம் முன்னோர் கற்றலை துவக்கி வைத்தனர். பாரம்பரிய வழக்கப்படி, கல்வி கற்றலை துவக்கும், வித்யாரம்பம் நிகழ்ச்சி, விஜயதசமி நாளில் நடத்தப்படுகிறது.
அவ்வகையில், 'தினமலர்' நாளிதழ் மற்றும் ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பிளே ஸ்கூல் சார்பில், 'அ'னா, 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்' என்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி, இன்று, காலை, 9:00 முதல், 10:30 மணி வரை, ராக்கியாபாளையம் ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில் நடைபெற உள்ளது.
இரண்டரை வயது முதல், மூன்றரை வயது வரையிலான ஏராளமான குழந்தைகளை பங்கெடுக்க செய்ய, ஏராளமான பெற்றோர் முன்பதிவு செய்துள்ளனர்.
கல்வியில் சாதனை படைத்து, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பிரமுகர்கள் மடியில், செல்ல குழந்தை களை அமர வைத்து, அவர்களின் பிஞ்சு விரல்களை பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்கும் சிறந்த தருணமிது.
நிகழ்ச்சியில், திருப்பூர் ஸ்ரீசாரதா சத்சங்கம் சுவாமினி ஸ்ரீமஹாத்மானந்த சரஸ்வதி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், 'கிளாசிக் போலோ' நிர்வாக இயக்குனர் சிவராம், ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் டிரஸ்ட் நிறுவனர் ஞானகுரு, திருப்பூர் ஆடிட்டர் ராமநாதன், கோவை ஸ்ரீசக்தி கல்வி குழுமங்களின் சேர்மன் தங்கவேல், ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பள்ளி வைஸ் சேர்மன் தீபன் தங்கவேல், ஆகியோர் குழந்தைகளுக்கு, வித்யாரம்பம் செய்து வைக்கின்றனர்.
வித்யாரம்பம் வாயிலாக, கல்விப்பயணத்தை துவக்க உள்ள குழந்தைகளுக்கு, ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் சேர்ந்து பயில, 10 சதவீத சிறப்பு சலுகை வழங்கவும், ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பள்ளி முன்வந்துள்ளது.