/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆண்டாள் பிரியதர்ஷினி பேச்சுக்கு எதிர்ப்பு
/
ஆண்டாள் பிரியதர்ஷினி பேச்சுக்கு எதிர்ப்பு
ADDED : பிப் 01, 2024 05:48 AM

திருப்பூர் : திருப்பூரில் நடந்த புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினியின் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர், காங்கயம் ரோடு, வேலவன் ஓட்டல் வளாகத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இதையொட்டி நேற்று, 'பொன்மொழி யென்னும் புது சூரியன்' எனும் தலைப்பில், எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி பேசும்போது, 'தேசியமும், தெய்வீகமும் எங்கள் உரிமை' என்று குறிப்பிட்டார். முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் குறுக்கிட்டு, 'நீங்கள் புத்தக திருவிழாவில் பேசுகிறீர்கள். இது தவறு,' என்று எதிர்ப்பு தெரிவித்தார். அவரை, விழா ஏற்பட்டாளர்கள் வெளியே அழைத்து சென்றனர். இவருடன் அமர்ந்திருந்த சிலரும், வெளியேறினர். இதையடுத்து, ஒரு நிமிடம் தனது பேச்சை நிறுத்தி மீண்டும் ஆண்டாள் பிரியதர்ஷினி பேச துவங்கினார். பேச்சை நிறைவு செய்யும்போது, கவிதை ஒன்றை வாசித்த அவர், 'இதன் பொருளை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்; ஏனெனில் இதற்கும் எதிர்ப்பு எழலாம்'' என்றார்.