/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கழிவை கொட்ட முயன்ற ஆந்திர லாரி சிறைபிடிப்பு
/
கழிவை கொட்ட முயன்ற ஆந்திர லாரி சிறைபிடிப்பு
ADDED : ஏப் 03, 2025 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு மீன் ஏற்றி சென்ற லாரி, மீன்களை இறக்கிவிட்டு, மீண்டும் திரும்பி கொண்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் கோவை - சேலம் பைபாஸ் ரோட்டில் செங்கப்பள்ளி அருகே வந்த போது, மீன் கொண்டு வரப்பட்ட தெர்மாகோல் கழிவு பெட்டிகளை குப்பையில் போடுவதற்காக லாரியை நிறுத்தினர்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் லாரியை சிறைபிடித்தனர். செங்கப்பள்ளி ஊராட்சி சார்பில், குப்பையை கொட்ட முயன்ற லாரிக்கு, 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

