/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விடுமுறையில் களைகட்டுகிறது ஆண்டிபாளையம் படகு இல்லம்
/
விடுமுறையில் களைகட்டுகிறது ஆண்டிபாளையம் படகு இல்லம்
விடுமுறையில் களைகட்டுகிறது ஆண்டிபாளையம் படகு இல்லம்
விடுமுறையில் களைகட்டுகிறது ஆண்டிபாளையம் படகு இல்லம்
ADDED : டிச 05, 2024 06:17 AM
திருப்பூர்; ஆண்டிபாளையம் படகு இல்லத்தில் வார விடுமுறை நாட்களில், பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், சுற்றுலா துறையினர் திருப்தியடைந்துள்ளனர்.
திருப்பூர், ஆண்டிபாளையம் குளத்தில், தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில், 1.30 கோடி ரூபாயில் படகு இல்லம் அமைக்கப்பட்டு, படகு சவாரி துவங்கப்பட்டுள்ளது. வார விடுமுறை மற்றும் பொது விடுமுறை நாட்களில், அதிகளவு உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளத்துக்கு வருவர் என, சுற்றுலாத்துறையினர் எதிர்பார்த்தனர்.
அதன்படி, கடந்த, 30ம் தேதி, 300 பேர்; 1ம் தேதி ஞாயிறு தினத்தில், 450 பேர் படகு சவாரி செய்துள்ளனர் என, சுற்றுலா துறையினர் கூறுகின்றனர்.கலெக்டர் பரிந்துரையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், 'சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்குழு' அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆர்.டி.ஓ., மோகனசுந்தரத்தை தலைவராகவும், மாவட்ட சுற்றுலா அலுவலரை உறுப்பினர் செயலராக கொண்டு, படகு இல்ல மேலாளர், திருப்பூர் மாநகராட்சி உதவி கமிஷனர் வினோத், நீர்வளத்துறை அதிகாரிகள் அம்சராஜ், ராகுல், தாசில்தார் மயில்சாமி, தீயணைப்புத்துறை அலுவலர் மோகன், இன்ஸ்பெக்டர் கவிதா, மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் பாரதிராஜா, சுற்றுலா சங்க நிர்வாகிகள் பூபதி, லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பயணிகள் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து, கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. லைப் ஜாக்கெட் அணிந்து, அதன் பாதுகாப்பை உறுதி செய்தனர்.