/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அங்கன்வாடி ஊழியர் காத்திருப்பு போராட்டம்
/
அங்கன்வாடி ஊழியர் காத்திருப்பு போராட்டம்
ADDED : நவ 05, 2024 06:23 AM

திருப்பூர்; திருப்பூரில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு கலெக்டர் வழங்கிய பணியிட மாறுதல் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அக்., 1ம் தேதி கலெக்டர் பணியிட மாறுதல் வழங்கினார். அந்த ஆணை அடுத்த ஒரு வாரத்தில் ரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கான மாத ஊதியமும் வழங்கப்படவில்லை. எனவே, பணியிட மாறுதல் வழங்கப்பட்ட இடத்துக்கே மீண்டும் பணி வழங்க வேண்டும்.
கூடுதல் பொறுப்பு பார்த்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு, மூன்று நாட்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டதை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நேற்று மாலை நடந்தது.
மாவட்ட தலைவர் சித்ரா தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் டெய்ஸி, மாவட்ட செயலாளர் கே.சித்ரா ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.
சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ரங்கராஜ், மாவட்ட பொருளாளர் சம்பத் உள்பட பலர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.