/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பருவ நிலை மாற்றத்தால் நோய் கால்நடை கண்காணிப்பு அவசியம்
/
பருவ நிலை மாற்றத்தால் நோய் கால்நடை கண்காணிப்பு அவசியம்
பருவ நிலை மாற்றத்தால் நோய் கால்நடை கண்காணிப்பு அவசியம்
பருவ நிலை மாற்றத்தால் நோய் கால்நடை கண்காணிப்பு அவசியம்
ADDED : மே 23, 2025 12:30 AM
திருப்பூர் : திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த மாதாந்திர பயிற்சி முகாம் நேற்று நடந்தது. கால்நடை வளர்ப்பாளர்கள், விவசாயிகள் பங்கேற்றனர். கோழி இனங்கள் தேர்வு செய்வது, பராமரித்து வளர்ப்பது, நோய் தாக்கத்தில் இருந்து காப்பது, வளர்ந்த பின் அவற்றின் வர்த்தக முறை உள்ளிட்டவை குறித்து பங்கேற்றவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை உதவி பேராசிரியர் மதிவாணன் பேசுகையில்,'வெயில், திடீர் மழை என பருவமழை நிலை மாற்றம் துவங்கியுள்ளது. மழை காலம் துவங்கும் முன்பாகவே கொட்டகைகளை சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். ஓரிரு நாள் வெயில் என்றாலும், அதிகமாகும் போது, கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தொடர் கண்காணிப்பு, பராமரிப்பு, நோய் மேலாண்மை முக்கியம்,' என்றார்.