/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவலங்கள் நிறைந்த அண்ணா காலனி பூங்கா
/
அவலங்கள் நிறைந்த அண்ணா காலனி பூங்கா
ADDED : ஏப் 03, 2025 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, 23வது வார்டு, அண்ணா காலனியில் மாநகராட்சி பூங்கா உள்ளது.
செயற்கை நீரூற்று, இருக்கைகள், நடைபாதை, விளையாட்டு சாதனங்கள், புல் தரை என அனைத்து வசதிகளும் உள்ளன. போதிய பராமரிப்பு இல்லாததால் தற்போது பயனற்ற நிலையில் உள்ளது.
பூங்காவில் உள்ள இருக்கைகள் உடைந்துள்ளன. தண்ணீர் இன்றி புல் மற்றும் செடிகள் காய்ந்து முட்புதர்கள் மண்டி காணப்படுகிறது.
நடைபாதை, சிறுவர் விளையாட்டு சாதனங்கள் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இப்பகுதி பொதுமக்களுக்கு பொழுது போக்குக்கு பூங்கா மட்டுமே துணையாக உள்ளது. பூங்காவை பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.