sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிவாலயங்களில் இன்று அன்னாபிேஷகம்

/

சிவாலயங்களில் இன்று அன்னாபிேஷகம்

சிவாலயங்களில் இன்று அன்னாபிேஷகம்

சிவாலயங்களில் இன்று அன்னாபிேஷகம்


ADDED : நவ 05, 2025 12:17 AM

Google News

ADDED : நவ 05, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: சிவாலயங்களில், ஐப்பசி பவுர்ணமி நாளில், அன்னாபிேஷகம் நடப்பது வழக்கம். அண்டம் மட்டுமல்லாது, அன்னமும் சிவவடிவம்தான்; அன்னாபிேஷகம் காட்சியை தரிசனம் செய்தால், அனைத்து சிவாலயங்களிலும் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பதும் ஆன்மிக பெரியோரின் வாக்கு.

இதுகுறித்து கூனம்பட்டி திருமடம், வேதாகம பாடசாலை முதல்வர் ஸ்ரீநடராஜ சுவாமி கூறியதாவது:

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும், உணவு உண்டு வாழ வேண்டும் என்பது இறைவனின் சங்கல்பம். அதனால்தான், இறைவனை, 'அன்னம்பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்' என்று போற்றுகிறோம்.

பரம்பொருளாகிய இறைவன், உலக மக்களை காக்கும் பொருட்டு திருவருள் புரிகிறார். சிவபெருமானுக்கு பிறப்பு, இறப்பு இல்லை; அவ்வளவு எளிதாக யாரும் அவரை அறிந்துகொள்ள முடியாது.

சிவபெருமான் அபிேஷக பிரியர்; மகாவிஷ்ணு அலங்கார பிரியர். ஐப்பசி மாத பவுர்ணமியில் நடக்கும் அன்னாபி ேஷகம் முக்கியமானது. ஐப்பசியை, துலா மாதம் என்கிறோம். அத்தகைய புண்ணிய மாதத்தில், புனித நீராடி, தீர்த்தம் கொண்டு இறைவனுக்கு அபிேஷகம் செய்ய வேண்டும்.

லிங்கத்திருமேனிக்கு, 16 வகையான திரவியங்களால் அபிேஷகம் செய்து, புனி தீர்த்த அபிேஷகம் செய்து, அன்னத்தால் அபிேஷகம் செய்து வழிபடுகிறோம். அன்னம் சாற்றி, காய்கறி, பழவகைகள், பலகார பட்சணங்களால் அலங்கரித்து வழிபடுகிறோம். அன்னாபிேஷக தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு, பிறவாநிலை கிடைப்பதுடன், குடும்பம் நீங்கா செல்வத்துடன் வாழும் என்பது ஐ தீகம். அதுமட்டுமல்லாது, உலகில் நல்ல மழை பொழியும், விவசாயம் செழிக்கும், உலகில் எப்போதும் உணவு பஞ்சம் வராது.

அன்னாபிேஷகம் செய்த அன்னம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்; நீர்நிலை உயிரினங்களுக்கு, சமர்ப்பிக்கப்படும். அனைத்து சிவாலயங்களிலும், இன்று அன்னாபிேஷகம் நடக்க உள்ளது. வேத சிவாகம திருமுறைப்படி வழிபாடு நடக்க உள்ளது; பக்தர்கள் அனைவரும் அன்னாபிேஷகத்தை கண்டு தரிசனம் செய்து இறையருள் பெறலாம்.






      Dinamalar
      Follow us