/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அழகுநாச்சியம்மன் கோவிலில் அன்னதான திட்டம் துவக்கம்
/
அழகுநாச்சியம்மன் கோவிலில் அன்னதான திட்டம் துவக்கம்
அழகுநாச்சியம்மன் கோவிலில் அன்னதான திட்டம் துவக்கம்
அழகுநாச்சியம்மன் கோவிலில் அன்னதான திட்டம் துவக்கம்
ADDED : பிப் 06, 2025 09:42 PM
உடுமலை; மடத்துக்குளம், காரத்தொழுவு அழகு நாச்சியம்மன் கோவிலில், அன்னதான திட்டம் துவக்க விழா நடந்தது.
மடத்துக்குளம், காரத்தொழுவு அழகு நாச்சியம்மன் கோவிலில், அன்னதான திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. அமைச்சர் கயல்விழி துவக்கி வைத்தார்.
அறநிலையத்துறை உதவி ஆணையர் தனசேகர், செயல் அலுவலர் தீபா, திருப்பூர் மாநகராட்சி 4ம் -மண்டலத்தலைவர் பத்மநாபன், முன்னாள் எம்.எல்.ஏ.,ஜெயராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'அறநிலையத்துறை மானிய கோரிக்கையில், அன்னதான திட்டம் ஆறு கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில், ஏற்கெனவே, 29 கோவில்களில், அன்னதான திட்டம் நடந்து வரும் நிலையில், 30- வது கோவிலாக, மடத்துக்குளம் அருகேயுள்ள காரத்தொழுவு அழகு நாச்சியம்மன் திருக்கோயிலில், தினமும், 25 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.