/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காங்கேயத்தின் அடையாள சின்னம் காளைமாட்டு சிலை அமைக்க வேண்டி உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
/
காங்கேயத்தின் அடையாள சின்னம் காளைமாட்டு சிலை அமைக்க வேண்டி உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
காங்கேயத்தின் அடையாள சின்னம் காளைமாட்டு சிலை அமைக்க வேண்டி உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
காங்கேயத்தின் அடையாள சின்னம் காளைமாட்டு சிலை அமைக்க வேண்டி உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
ADDED : நவ 21, 2024 05:48 PM

காங்கேயம்:கரிய நிறம் , கூரான கொம்புகள்,மலையை யொத்த திமில்கள், களிற்றிக்கீடான கம்பீர தோற்றம் என காண்போரை மிரளவைக்கும் காங்கேயம் இன காளைகள் உலக பிரசித்தி பெற்றவை.
சல்லிகட்டுகளில் தமது பிடிபடாத ஆற்றலினால் புகழ் சேர்ப்பவை இவ்வின காளைகள். கடும் வறட்சியையும் கூட தாங்கி குறைவான தீவனத்தை உட்கொண்டு சத்தான பாலைத்தரும் காங்கேயம் இன மாடுகளை மணமுடிக்கும் பெண்களுக்கு தாய் வீட்டு சீதனமாக தருகின்ற வழக்கம் இன்றளவும் மேற்கு தமிழகத்தில் மரபாக கடைபிடிக்கப்படுகிறது.
தமிழகத்திலுள்ள பெரும்பாலான நகரங்களின் அடையாளமாக அந்த பகுதி சார்ந்த பிரபலமான பொருட்கள் அடைமொழியாக காங்கேயம் என்றாலே காளை மாடுகள் அனைவரின் கவனத்திற்கும் வருபவையாகும். காங்கேயம் காளைகளுக்கு சிலை அமைக்கவேண்டும் என்ற பல்லாண்டுகால கோரிக்கை நடவடிக்கை இன்றி கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் சிலை அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து வெற்றி பெறும் சட்டமன்ற உறுப்பினர்கள் இது குறித்து ஆர்வம் காட்டாமல் அலட்சியமாக இருப்பது பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கேயம் எம்.எல்.ஏ., வாக இருந்த உ.தனியரசு கடந்த 2017ம் ஆண்டு காங்கேயம் இன மாடுகளுக்காக 2.5 கோடி ரூபாய் அமைச்சரால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கேயம் இன காளை நினைவு சிலைக்காக நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் எம்.எல்.ஏ., என்ற முறையில் சிலை அமைக்கவும், மாடுகளை பாதுகாக்கவும் முதல்வரிடம் மனு தரப்பட்டுள்ளது. நல்ல அறிவிப்பு வரும் என்றார். ஆனால் இதற்கான நவடிக்கை ஏதும் இல்லை.
கடந்த 2020ம் ஆண்டு திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் அப்போதைய தமிழக முதலமைச்சர் காங்கேயம் காளை சிலை அமைக்க அறிவிப்பு வெளியிட்டார். கடந்த 2021ம் ஆண்டு பிப். 11ம் தேதி தேர்தல் பிரச்சரத்துக்கு காங்கேயம் வந்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காங்கேயம் ரவுண்டானாவில் காங்கேயம் காளைக்கு வெங்கலச்சிலை அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும் தேர்தல் பிரச்சாரத்தின்போது மு.க.ஸ்டாலின் காங்கேயம் இன காளை சிலை அமைக்கப்படும் என தெரிவித்தார். மு.பெ.சாமிநாதனும் தேர்தல் பிரச்சாரத்தின்போது சிலை அமைக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
காங்கேயம் காளை சிலை அமைக்க காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவருக்கும் அனுமதி கோரப்பட்டது.
அரசு செயலாளர் சென்னை, பொதுத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய் கோட்டாச்சியர் என பல்வேறு துறைக்கும் காங்கேயம் காளை சிலை வைக்க அனுமதி கேட்டு கடிம் எழுதப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகில் காளை மாடு சிலை அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஆனால் அரசின் ஒப்புதல் கிடைக்காமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஷ்குமார் தலைமையில் காங்கேயம் பகுதி பொதுமக்கள் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வரும் 27ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு இணையவழி ஆதாரவு சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. இதில் தற்போது வரை 800 பேர் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

