ADDED : பிப் 16, 2024 12:55 AM

திருப்பூர்:திருப்பூரில் உள்ள பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் களைகட்டுகின்றன.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் அதிகளவில் நடக்கின்றன. மாணவ, மாணவியர் தங்கள் திறன்களை கலைநயத்துடன் வெளிப்படுத்தி வருகின்றனர்.
திருப்பூர், கோல்டன் நகர்; ஊத்துக்குளி ரோடு, கருமாரம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகள்; பொல்லிக்காளிபாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட ஏராளமான அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் இன்று ஆண்டு விழாக்கள் நடக்கின்றன. இதில், மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
மாணவருக்கு பரிசு
திருப்பூர் மாநகராட்சி, ஒன்றாவது வார்டு செட்டிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முன்னாள் கவுன்சிலர் மாரப்பன், தலைமை வகித்தார். கவுன்சிலர் தனலட்சுமி, முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தரணி வரவேற்றார். மாநகராட்சி முதலாம் மண்டல தலைவர் உமாமகேஸ்வரி, வட்டார கல்வி அலுவலர் முஷ்ராக்பேகம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
விழாவையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். பள்ளி மாணவ, மாணவியரின் வண்ணமிகு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.