/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிகளில் ஆண்டு விழா; மாணவர்களுக்கு பரிசு
/
பள்ளிகளில் ஆண்டு விழா; மாணவர்களுக்கு பரிசு
ADDED : ஏப் 04, 2025 11:01 PM

உடுமலை; எலையமுத்துார் ஊராட்சி ஒன்றியய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
உடுமலை அருகே எலையமுத்துார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆண்டு விழாவிற்கு, தலைமையாசிரியர் ஜனகம் தலைமை வகித்தார். ஆசிரியர் சுரேஷ்குமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
ஆசிரியர் கவிதா ஆண்டறிக்கை வாசித்தார். பாட்டு, நடனம் உட்பட மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆசிரியர் கலைசெல்வி நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், பெற்றோர், பள்ளி மேலாண்மைக்குழுவினர் பங்கேற்றனர்.
* கரட்டூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது.
விழாவில், பள்ளி மேலாண்மைக்குழுவினர், சமூக ஆர்வலர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கு ஆண்டுவிழாவையொட்டி, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கல்வியின் முக்கியத்துவம் குறித்து 'பள்ளிக்கூடம்' என்ற தலைப்பில் மாணவர்களின் நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.விழாவில் மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

