UPDATED : ஜூன் 03, 2026 07:31 PM
ADDED : ஜூன் 03, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
திருப்பூர் - பெருமாநல்லுார் ரோடு மற்றும் கூலிபாளையம் - திருமுருகன்பூண்டி ரோடு சந்திக்கும் பூலுவபட்டி நால்ரோட்டில், கடந்த மூன்று மாதங்கள் முன்பு சிக்னல் அணைக்கப்பட்டு, வாகனங்கள் 150 மீட்டர் சுற்றிச் செல்லும் வகையில் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன.
நேற்று முன்தினம் முதல் இந்தத் திட்டம் திடீரெனத் திரும்பப் பெறப்பட்டு, தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன. சிக்னல் இன்னும் செயல்படாததாலும், போக்குவரத்து போலீசார் அங்கு இல்லாததாலும், பெருமாநல்லுார் ரோடு மற்றும் பூண்டி ரிங் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் ஒற்றை வழியிலேயே சகட்டுமேனிக்கு விதிமீறிச் செல்கின்றன. இதனால், அங்கு குழப்பமும், விபத்து அச்சமும் நிலவி வருகிறது.
---
.
