/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மேலும் ஒரு படகு குழாம்; சுற்றுலா துறை திட்டம்
/
மேலும் ஒரு படகு குழாம்; சுற்றுலா துறை திட்டம்
ADDED : ஏப் 24, 2025 06:35 AM

திருப்பூ; உடுமலை அடுத்த மருள்பட்டி குளத்தில் படகு குழாம் அமைக்க சுற்றுலா துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட சுற்றுலா துறை மூலம், திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தில் படகு குழாம் அமைக்கப்பட்டு, படகு சவாரி அறிமுகம் செய்யப்பட்டது.
உள்ளூர் மக்கள் மத்தியில், இது வரவேற்பைப் பெற்றிருக்கிறது. உடுமலை, கண்ணமநாயக்கனுார் கிராமம், மருள்பட்டி அருகே, 108.42 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது.
உடுமலையில் இருந்து, 8 கி.மீ., தொலைவில், கொழுமம் செல்லும் வழியில், உரல்பட்டி என்ற ஊருக்கு அருகில், மாநில நெடுஞ்சாலையை ஒட்டி இக்குளம் அமைந்திருக்கிறது.
குளத்தில் சுற்றுலா மேம்பாடு சார்ந்த பணிகளை மேற்கொள்ள முடியுமா என்பது குறித்து, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார் தலைமையில், பி.டி.ஓ., ெஷல்டன், வருவாய் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் ஆய்வு மேற் கொண்டனர்.
சுற்றுலா சங்க நிர்வாகிகள் மற்றும் மருள்பட்டி மண், நீர் வள பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

