sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 விடைத்தாள் திருத்தும் பணி; ஏப்ரலில் துவங்க ஆயத்தம்

/

 விடைத்தாள் திருத்தும் பணி; ஏப்ரலில் துவங்க ஆயத்தம்

 விடைத்தாள் திருத்தும் பணி; ஏப்ரலில் துவங்க ஆயத்தம்

 விடைத்தாள் திருத்தும் பணி; ஏப்ரலில் துவங்க ஆயத்தம்


ADDED : பிப் 22, 2026 06:39 AM

Google News

ADDED : பிப் 22, 2026 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: மார்ச், 2ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க உள்ள நிலையில், ஏப்ரல் முதல் வாரத்தில் விடைத்தாள் திருத்தும் பணியை துவங்க தேர்வுத்துறை ஆயத்தமாகி வருகிறது. மாவட்ட அளவில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் பட்டியல் தயாராகி வருகிறது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 2ல் துவங்குகிறது; மொழித்தாள் தேர்வுகளை தொடர்ந்து, 9ம் தேதிமுதல் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கிறது. மார்ச், 26 உடன் பொதுத்தேர்வு முடிவடைகிறது.

மே, 8ல் தேர்வு முடிவுகள் வெளியாகுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்க தேர்வுத்துறை ஆயத்தமாகி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் விடைத்தாள் திருத்தும் மையங்கள், கூர்ந்தாய்வாளர், முதன்மை தேர்வர் உட்பட விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் விபரம் குறித்த பட்டியல் சுறுசுறுப்பாக தயாராகி வருகிறது.

தேர்வுத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அறிவிக்கப்படும் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு, போலீஸ் பாதுகாப்புடன் விடைத்தாள்கள் கொண்டு செல்லப்படும். பொதுத்தேர்வு முடிந்த பின், தேர்வுத்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, விடைக்குறிப்பு தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் நடக்கும்.

பத்து முதல், 14 நாட்கள் வரை விடைத்தாள் திருத்தும் பணி நடக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us