ADDED : ஏப் 09, 2026 09:38 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:மார்ச் 11-ல் துவங்கி ஏப்ரல் 6-ல் நிறைவடைந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி தொடங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில், தாராபுரம் செயின்ட் அலோசியஸ் பள்ளி; குமார் நகர் இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி ஆகிய இரண்டு மையங்களில் இப்பணிகள் நடைபெறுகின்றன.
மாவட்ட கல்வி அலுவலர்கள் காளிமுத்து, மணிமாறன் (தனியார் பள்ளிகள்) ஆகியோர் இப்பணிகளை ஒருங்கிணைக்கின்றனர். திருத்தும் பணி வரும் ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதி வெளியாக உள்ளது.
