/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அந்தியூர் ரோட்டை விரிவுபடுத்தணும்
/
அந்தியூர் ரோட்டை விரிவுபடுத்தணும்
ADDED : பிப் 04, 2026 06:10 AM
உடுமலை: அந்தியூர்-கொங்கல்நகரம் ரோட்டில் போக்குவரத்து அதிகரித்துள்ளதால், ரோட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, அந்தியூரில், தேசிய நெடுஞ்சாலையில், இணையும் ரோடு பல ஆண்டுகளாக விரிவுபடுத்தப்படாமல் உள்ளது. இந்த ரோட்டில், பண்ணைக்கிணறு, முக்கூடு ஜல்லிபட்டி, பீக்கல்பட்டி, அந்தியூர் கிராமங்கள் அமைந்துள்ளன.
மின் உற்பத்திக்காக, காற்றாலைகளும் அதிகளவு நிறுவப்பட்டுள்ளன. பண்ணைக்கிணறு ஊராட்சிக் குட்பட்ட, கோழிக்குட்டையில், அரசின் கால்நடை மருத்துவ கல்லுாரி செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு, அந்தியூர்-கொங்கல்நகரம் ரோட்டில், போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. ஆனால், ரோடு, கிராம இணைப்பு ரோடு அளவுக்கு மிக குறுகலாக உள்ளது; அபாய வளைவுகளும் அதிகளவு உள்ளன.
இரவு நேரங்களில், விபத் துகள் ஏற்படுகிறது. கனரக வாகனங்கள் வரும் போது, பிற, வாகனங்கள் விலகி செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே ரோட்டை விரிவுபடுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை உள்ளது. ஆனால், நெடுஞ்சாலைத்துறை சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

