/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : நவ 21, 2024 09:33 PM

உடுமலை; உடுமலை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் பிரியா நர்சிங் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரி சார்பில், போதைப்பொருள் மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.
உடுமலை நீதிமன்ற வளாகத்தில், விழிப்புணர்வு ஊர்வலத்தை, உடுமலை கூடுதல் மாவட்ட நீதிபதி ராஜலிங்கம், கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான மணிகண்டன், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் நித்யகலா, அரசு வக்கீல் சேதுராமன், வக்கீல்கள் மகேஸ்வரன், விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உடுமலை சார்பு நீதிமன்ற வளாகத்தில் துவங்கிய ஊர்வலம், பிரதான ரோடுகள் வழியாக வந்து, பஸ் ஸ்டாண்ட் அருகே நிறைவடைந்தது.
இதில், பிரியா நர்சிங் கல்லுாரி மாணவ, மாணவியர் நுாற்றுக்கும் மேற்பட்டோர், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு அட்டைகள் ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.