/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண் கழிவு குவிப்பு அகற்ற எதிர்பார்ப்பு
/
மண் கழிவு குவிப்பு அகற்ற எதிர்பார்ப்பு
ADDED : அக் 19, 2024 12:49 AM

அனுப்பர்பாளையம்: திருப்பூரில் உள்ள சாக்கடை கால்வாய்கள் பலவற்றில் மண் சேர்வதால், கழிவு நீர் முறையாக செல்வதில்லை.
மண் கழிவுகளால் மழை நேரங்களில் கால்வாயில் முறையாக செல்ல முடியாமல் கால்வாயை விட்டு வெளியேறி மழைநீர் ரோட்டுக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால் அவ்வப்போது, துாய்மைப் பணியாளர்கள் சாக்கடை கால்வாயை துார் வாரி வருகின்றனர்.
இவ்வாறு துார்வாரப்படும் மண் கழிவுகளை அங்கிருந்து உடனடியாக எடுத்து செல்வதில்லை.
மண் கழிவுகள் காய்ந்த பிறகு எடுத்து செல்லலாம் என சாக்கடை கால்வாய் ஓரத்தில் குவித்து வைத்து விடுகின்றனர்.
தற்போது மழை காலம் என்பதால், அடுத்தடுத்து மழை வருவதால் சாக்கடை கால்வாய் ஓரத்தில் குவித்து வைக்கப்படும் மண் கழிவுகள் மீண்டும் சாக்கடை கால்வாய்க்குள் மழையால் அடித்து செல்லும் நிலை ஏற்படுகிறது.
மழைக்காலத்தையொட்டி, பல இடங்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் துார்வாரப்பட்டு வருகிறது. அவ்வாறு துார் வாரப்படும் மண் கழிவுகளை கால்வாய் ஓரத்தில் குவித்து வைக்காமல் உடனுக்குடன் அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

