/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செல்வ விநாயகர் கோவிலில் நாளை அனுஷ பூஜை
/
செல்வ விநாயகர் கோவிலில் நாளை அனுஷ பூஜை
ADDED : மார் 18, 2025 10:04 PM
உடுமலை; உடுமலை ஜி.டி.வி., லே -அவுட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில், காஞ்சி மகா பெரியவா அனுஷ பூஜை, நாளை நடக்கிறது.
இக்கோவிலில், பங்குனி மாத அனுஷ நட்சத்திர நாளில், காஞ்சி மகா பெரியவா அனுஷ பூஜை நாளை (20ம்தேதி) நடக்கிறது. மாலையில், விக்னேஷ்வர பூஜையுடன் வழிபாடு துவங்குகிறது.
தொடர்ந்து, சங்கல்பம், பீட பூஜை, அனுஷ பிரதான பூஜை, சித்ர பீட ஆவாஹனம், குரு தியானம், பூர்ண கும்ப மரியாதை, காஞ்சி மகா பெரியவா அஷ்டோத்திர அர்ச்சனை நடக்கிறது.
பின், விநாயகர் அகவல், சிவபுராணம், திருத்தொண்டர் தொகை, கோளறு திருப்பதிகம், பஞ்சபுராணம், திருப்புகழ் உள்ளிட்ட ஸ்லோக பாராயணங்கள், குரு கீதம், நாம சங்கீர்த்தனம், வேதபாராயணம், காஞ்சி மட ஸ்வஸ்த்தி வசனம், சதுர்வேத பாராயணம் நடக்கிறது.
வழிபாட்டில் உலக அமைதிக்கும், சமாதானத்துக்கும், ஒற்றுமைக்கும் ஆரோக்கியத்துக்கும் பக்தர்களின் கூட்டு பிரார்த்தனை நடக்கிறது.