/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டா இல்லாவிட்டால் பணம் அமைச்சரிடம் முறையீடு
/
பட்டா இல்லாவிட்டால் பணம் அமைச்சரிடம் முறையீடு
ADDED : பிப் 25, 2026 06:40 AM

பல்லடம்: 'எங்களுக்கு பட்டா வேண்டும்; இல்லையெனில், கொடுத்த பணத்தை திருப்பித் தர வேண்டும்' என, பல்லடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அமைச்சரிடம், பொதுமக்கள் முறை யிட்டனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு மருத்துவமனையில் நேற்று நடந்த பூமி பூஜை விழாவில், அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி பங்கேற்றனர். இச்சிப்பட்டி கிராம மக்கள், பட்டா விண்ணப்பங்களுடன் அரசு மருத்துவமனையில் ஒன்று திரண்டு, அமைச்சர் சாமிநாதனிடம் மனு அளித்து முறையிட்டனர்.
அதில், 'இச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாங்கள், வீடு, வீட்டு மனை இல்லாமல், குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என, 2 ஆண்டுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறோம். பட்டா பெற்று தருவதாக கூறி, ஆயிரக்கணக்கான ரூபாய் எங்களிடம் வசூலித்துச் சென்றனர்.
பட்டா இல்லாவிட்டால், நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பித் தர வேண்டும்' என்று முறையிட்டனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட அமைச்சர் சாமிநாதன், ''இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று கூறி சென்றார்.

