sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 'வழிபாட்டு உரிமை மறுக்கும் தி.மு.க., அரசு'

/

 'வழிபாட்டு உரிமை மறுக்கும் தி.மு.க., அரசு'

 'வழிபாட்டு உரிமை மறுக்கும் தி.மு.க., அரசு'

 'வழிபாட்டு உரிமை மறுக்கும் தி.மு.க., அரசு'


ADDED : பிப் 25, 2026 06:35 AM

Google News

ADDED : பிப் 25, 2026 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:

சஷ்டி மற்றும் கிருத்திகையை முன்னிட்டு, முருக பக்தர்கள் பேரவை சார்பில், தமிழகம் முழுதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில்களில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர். அறநிலையத்துறை கோவில் என்றும், பொது இடம் என்று கூறி, முருக பக்தர்களை அத்துமீறி கைது செய்து, அராஜக போக்கில் ஈடுபட்டிருக்கிறது தி.மு.க. அரசு.

கும்பகோணம் தேனுபுரீஸ்வரர் கோவில், தஞ்சாவூர் சுப்ரமணிய சுவாமி கோவில் ஆகிய கோவில்களுக்கு கந்த சஷ்டி கவசம் பாட சென்ற முருக பக்தர்களை வழிபாட்டு உரிமையை மறுக்கும் விதத்தில் சட்டத்துக்கு புறம்பாக அத்துமீறி கைது செய்திருக்கிறது தமிழக போலீசார். காரமடை, குருந்தமலை முருகன் கோவிலில் பாராயணம் செய்த பக்தர்களை குண்டு கட்டாக துாக்கி வெளியேற்றி இருக்கிறது.

தமிழக கோவில்களில் பாராயணம் செய்ய அனுமதி மறுத்துள்ளதால், முருக பக்தர்களுக்கு அநீதியை இழைத்து இருக்கிறது தமிழக அரசு. இந்திய அரசியல் சாசன சட்டம், மக்களுக்கு வழங்கிய வழிபாட்டு உரிமையை பறித்து, அடக்கு முறையை கையாண்டு இருக்கிறது. இதை ஹிந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us