/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் 4க்குள் விண்ணப்பிக்கலாம்
/
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் 4க்குள் விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் 4க்குள் விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் 4க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 23, 2025 12:29 AM
உடுமலை : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த, 16ம் தேதி வெளியாகியது. இத்தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வில் பங்கேற்காத மாணவ, மாணவியருக்கு, துணைத்தேர்வு, ஜூலை 4 முதல், 10ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
இத்தேர்வில் பங்கேற்க, மாணவர்கள் அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் மாவட்ட கல்வி அலுவலத்தில் செயல்படும் அரசு தேர்வுகள் சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்; விண்ணப்பிக்க கடைசி நாள், ஜூன், 4ம் தேதி.
* மாவட்டத்தில் அறிவியல் தேர்வெழுதியவர்களில் 631 பேர் தேர்ச்சி பெறவில்லை. அதன் துணைத்தேர்வு ஜூலை, 9ல் நடக்கிறது. செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், பயிற்சி வகுப்பில் இணைய, டி.இ.ஓ., ஆபீசில் இன்று (23ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம், என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.