/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண்கள் முன்னேற்ற சேவை விருது ஜூன் 12க்குள் விண்ணப்பிக்கலாம்
/
பெண்கள் முன்னேற்ற சேவை விருது ஜூன் 12க்குள் விண்ணப்பிக்கலாம்
பெண்கள் முன்னேற்ற சேவை விருது ஜூன் 12க்குள் விண்ணப்பிக்கலாம்
பெண்கள் முன்னேற்ற சேவை விருது ஜூன் 12க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 14, 2025 11:07 PM
திருப்பூர்; பெண்கள் முன்னேற்றத்துக்காக சேவை புரிந்த சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு, சுதந்திர தினவிழாவின் போது, தமிழக முதல்வரால் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், விருது பெற தகுதியானவர்கள், சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த, 18 வயதுக்கு மேற்பட்ட, பெண்கள் முன்னேற்றத்துக்காக சேவையாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம். பெண்கள் முன்னேற்றத்துக்காக இயங்கும், அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம். விருது பெற தகுதியான சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள், https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில், ஜூன் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்தில் விண்ணப்பித்த அனைத்து ஆவணங்களுடன், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூகநல அலுவலகத்தில், ஜூன் 18ம் தேதிக்குள் கருத்துரு சமர்ப்பிக்க மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.