/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இணை இயக்குனர் நியமனம் மருத்துவத்துறை நிம்மதி
/
இணை இயக்குனர் நியமனம் மருத்துவத்துறை நிம்மதி
ADDED : டிச 01, 2024 12:55 AM
திருப்பூர்: ஐந்து மாதங்களாக காலியாக இருந்த, மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனர் பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனராக இருந்த கனகராணி கடந்த ஜூன் மாதம் பணி ஓய்வு பெற்றார். தற்காலிகமாக பல்லடம் மருத்துவமனை கண்காணிப்பாளர் ராமசாமி பணியை தொடர்ந்து வந்தார்.
ஐந்து மாதங்களாக பொறுப்பு அலுவலர் நிலையிலேயே, இணை இயக்குனர் பணியிடம் தொடர்ந்து வந்தது. அலுவல் ஆய்வு கூட்டம், மருத்துவ பணிகள் குறித்த ஆய்வின் போது பொறுப்பு அலுவலரே பங்கேற்று வந்தார்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனர் மீரா, திருப்பூர் மாவட்ட மருத்துவப் பணிகள் துறை இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஐந்து மாதங்களாக காலியாக இருந்த பணியிடத்துக்கு இணை இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட மருத்துவ பணிகள் துறை அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.