ADDED : நவ 13, 2024 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக பணிபுரிந்த பவன்குமார், கடந்த அக்., மாதம் சென்னைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். ஒரு மாதமாக புதிய கமிஷனர் நியமிக்கப்படாதநிலையில், துணை கமிஷனர்களே கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தனர்.
இந்நிலையில், நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனரான ராமமூர்த்தியை, திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக பணியிட மாறுதல் செய்து, முதன்மைச் செயலர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். புதிய கமிஷனர் விரைவில் பொறுப்பேற்க உள்ளதாக, மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.