/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்வி மாவட்ட அலுவலர்கள் நியமனம்
/
கல்வி மாவட்ட அலுவலர்கள் நியமனம்
ADDED : அக் 11, 2024 12:35 AM
திருப்பூர் : திருப்பூர், மணக்கடவு, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காளிமுத்து, திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலராக (இடைநிலை) நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆக., மாதம், திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலராக (இடைநிலை) இருந்த பக்தவச் சலம், கரூர் மாவட்டத்துக்கும், தாராபுரம் மாவட்ட தொடக்க கல்வி அலு வலர் ஜெகதீசன் திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டனர். திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக இருந்த தேவராஜ், திருப்பூர் தனியார் பள்ளி களுக்கான மாவட்ட கல்வி அலுவலராக மாற்றப்பட்டார்.
திருப்பூர் மற்றும் தாராபுரம் தொடக்க கல்வி அலுவலர் பணியிடம் தற்காலிக பொறுப்பிலே தொடர்ந்து வந்தது. திருப்பூர், மணக்கடவு, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காளிமுத்து, திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலராக (இடைநிலை) கூடுதல் பொறுப்பு கவனித்து வந்தார். இந்நிலையில், மாநிலம் முழுதும், 45 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்கி, பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவின்படி, வேலுார், காட்பாடி, கரிகிரி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனி பதவி உயர்வு பெற்று, திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல், பழனி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருள்ஜோதி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக (தாராபுரம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் பணியை, கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த திருப்பூர், மணக்கடவு, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காளிமுத்து, பதவி உயர்வு அடிப்படையில் அப்பணியிடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.