ADDED : பிப் 10, 2025 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான, குத்துச்சண்டை போட்டி, மயிலாடுதுறை, ஏ.ஆர்.சி., கல்லுாரியில் நடந்தது.
இதில், திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏஞ்சல்தேவி, யோகேஸ்வரி ஆகியோர், தங்கம் வென்றனர். பிளஸ் 1 மாணவி தீபிகா, பிரியதர்ஷினி, ஆஷிகா ஆகியோர் மூன்றாமிடம் பெற்று வெண்கலம் வென்றனர். இவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லாஅமலோற்பமேரி, பள்ளி விளையாட்டு இயக்குனர் முருகேஸ்வரி, உடற்கல்வி ஆசிரியர்கள் லாவண்யா, மோகனசுந்தரி, பயிற்சியாளர் ஷேக் முகமது உள்ளிட்டோர் பாராட்டினர்.

