/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆவண எழுத்தர்களுக்கு பாராட்டு விழா
/
ஆவண எழுத்தர்களுக்கு பாராட்டு விழா
ADDED : ஜூலை 22, 2025 12:20 AM

பல்லடம்; பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில், லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுவதாக கூறி, கடந்த, 2023ம் ஆண்டு, பத்திரம் ஆவண எழுத்தர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை ஒருங்கிணைத்த ஆவண எழுத்தர்கள் ஜெகதீசன் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் உரிமங்களை ரத்து செய்து, அப்போதைய மாவட்ட சார் பதிவாளர் லிங்கேஸ்வரன் உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து, ஜெகதீசன், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு, சமீபத்தில் வெளியானது. அதில், மாவட்ட பதிவாளரின் உத்தரவை ரத்து செய்து கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
இது தொடர்பாக, நேற்று, பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி பல்லடத்தில் நடந்தது. இதில், பத்திர ஆவண எழுத்தர்கள் சார்பில், ஜெகதீசன், பாலசுப்பிரமணியத்துக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

