/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சி தலைவருக்கு பாராட்டு விழா
/
ஊராட்சி தலைவருக்கு பாராட்டு விழா
ADDED : ஜன 02, 2025 06:15 AM

அவிநாசி; வேலாயுதம்பாளையம் ஊராட்சியில், 35 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய ஊராட்சி தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு விழா நடத்தினர்.
அவிநாசி ஒன்றியம், வேலாயுதம்பாளையம் ஊராட்சி தலைவர் சாந்தி. இவர் ஊராட்சி பகுதியில், 35 ஆண்டு கால கோரிக்கைகளான கான்கிரீட் தளம் வீதிகளில் அமைத்தல், பேவர் பிளாக் வசதி, சாக்கடை கால்வாய் வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்குகள், குடிநீர் மேல்நிலைத் தொட்டி ஆகிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார்.
இதனையொட்டி, 8, 11 மற்றும் 12வது வார்டு பகுதி பொதுமக்கள் சார்பில், ஊராட்சி தலைவர் சாந்தி, துணைத் தலைவர் விஜயலட்சுமி மற்றும் கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, ராயன், ஜோதி ஆகியோருக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

