/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய விளையாட்டு மாணவியருக்கு பாராட்டு
/
குறுமைய விளையாட்டு மாணவியருக்கு பாராட்டு
ADDED : ஆக 23, 2025 12:23 AM

பல்லடம்: குறுமையை அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் பிரெய்ஸி கவிதா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் புஷ்பலதா, ஆசிரியர் கோமதி முன்னிலை வகித்தனர். கேரம், கபடி, கையுந்து பந்து, பூப்பந்து, இறகுப்பந்து ஆகிய போட்டிகளில், மாணவியர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர்.
இதேபோல், 100மீ., ஓட்டப்பந்தயத்தில் சுஜிகிருஷ்ணா முதலிடம் பிடித்தார். 80மீ., தடை ஓட்டத்தில் அனுசாஸ்ரீ முதலிடம் பெற்றார்.
தடகளப் போட்டிகளில் பங்கேற்ற மாணவியர் சுஜிதா, ராகவி, ஆராதனா, தர்ஷிகா, திவ்யதர்ஷினி ஆகியோர், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றனர்.
குழு போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் மற்றும் தடகளப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களில் வென்றவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவியருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.