/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செஞ்சிலுவை சங்க பயிற்சி மாணவர்களுக்கு பாராட்டு
/
செஞ்சிலுவை சங்க பயிற்சி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : செப் 02, 2025 11:06 PM

திருப்பூர்; இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ஹரியானா கிளை சார்பில், பல்கலை மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, கடந்த 22 முதல், 28 ம் தேதி வரை, பஞ்சாப் தர்மசாலா, பிரஹாம் சரோவரில், மாநிலங்களுக்கு இடையேயான இளைஞர் செஞ்சிலுவை சங்க பயிற்சி முகாம் நடந்தது.
இம்முகாமில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள், முத்துக்குமரன், நித்திஸ்வரன் ஆகியோர் பங்கேற்று, பயிற்சி பெற்றனர். பயிற்சி முடித்து திரும்பிய மாணவர்கள் கல்லுாரி முதல்வர் கிருஷ்ணனிடம் தாங்கள் பெற்ற பரிசு, சான்றிதழை வழங்கி, பாராட்டு பெற்றனர். உடன், கல்லுாரி செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் பியூலாகுமாரி, விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.